`கடவுளின் தேசம்' கேரளா, கண்ணீரும் கதறலிலும் மிதக்கிறது. கேரளாவுக்காக ஒட்டுமொத்த நாடும் வேண்டுகிறது; உதவிக்கரம் நீட்டுகிறது இந்நிலையில், மாநிலத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கும் திருச்சூர் மாவட்டத்தின் வடக்காஞ்சேரியைச் சேர்ந்த கிரேஸி, வெள்ளத்திலிருந்து தப்பித்த `திக் திக்' தருணங்களைப் பகிர்கிறார்.
அடுத்ததாக , மலப்புரைத்தைச் சேர்ந்த ஜெய்ஷால் (வயது 32) இப்போது கடற்படை வீரர்களுக்கு இணையாக கொண்டாடப்படும் மீனவர் ஆகியுள்ளார். கேரள மழை வெள்ளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜெய்ஷால் தன் முதுகை படிக்கட்டாக்கிக்கொள்ள பெண்கள் அதில் ஏறி படகில் அமர்ந்த சம்பவம் இந்தியா முழுவதும் பாராட்டுக்குள்ளாகியுள்ளது. #keralafloods #keralarain #keralafloods2018 #letshelpkerala